பக்கம் எண் :

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
மாற்றுவார் மேற்றே பொறை.

 

அமர் அகத்து வன்கண்ணர் போல-போர்களத்திற்குச் சென்றார் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்பு ஒரு சில கடுமறவர் மேலேயே இருத்தல்போல; தமர் அகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே-ஒரு குடியிற் பிறந்தார் பலராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பு அதைச் செய்யவல்ல ஒரு சிலர் மேலேயே உள்ளதாம்.

விளக்கம்பற்றி உவமத்திற்கும் பொருட்கும் வேண்டிய சொற்கள் வருவிக்கப்பட்டன. உம்மை இறந்தது தழுவிய எச்சம். ஏகாரம் பிரிநிலை. இக்குறளால் குடிசெய்வாரின் பொறுப்புக் கூறப்பட்டது.