பக்கம் எண் :

இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு.

 

கனவிலும் கரத்தல் தேற்றாதார் மாட்டு-தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; இரத்தலும் ஈதலே போலும்-ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்!

இரந்த பொருள் இழிவுந் துன்பமுமின்றி வருதலாலும், ஈவோனுக்குப் புகழைக் கொடுத்தலாலும், ’இரத்தலும் ஈதலே போலும்’ என்றார். உம்மை யிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது எச்சம். ஏகாரம் ஈற்றசை.