பக்கம் எண் :

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.

 

கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது-வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவருக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது; கரப்பு இலார் வையகத்து உண்மையான்-தம்மிடத்துள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசிலர் உலகத்து இருப்பதனாலேயே.

அத்தகையார் இல்லையெனின், தன்மானமுள்ள இரப்போரும் இறப்பர் என்பதாம்..