பக்கம் எண் :

இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி

 

இரப்பான் வெகுளாமை வேண்டும்- இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாவிடத்து இரந்தவன் சினங்கொள்ளாதிருத்தல் வேண்டும்; நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி-முற்பிறப்பில் தானும் தன்னை இரந்தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே போதிய சான்றாம்,

தான் அளந்த அளவே தனக்கும், ஆதலாற் சினத்திற்கிடமில்லை யென்பது கருத்து. ஈயாத கஞ்சர் செல்வத்தைக் கள்வர் கவர்வதால் அவர் வறுமையடைவதும், அறநூற் கூற்றும், பிற சான்றுகளாம்.

ஏதிலார் குற்றம்போற் தன்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

(குறள்,190)

என்பதாம். ஏகாரம் பிரிநிலை; உம்மை எச்சவும்மை. கரி=சான்று (evidence), சான்றாளன் (witness).