பக்கம் எண் :

தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.

 

தெள்நீர் அடு புற்கை யாயினும் -தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும் ;தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியதுஇல் -தன் உழைப்பினால் வந்த வுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை,

நொந்து சுமந்து பெற்ற பிள்ளை காக்கைக் குஞ்சுபோற் கருத்திருப்பினும், தாய்க்குத் தன்பிள்ளை நன்பிள்ளையாதல்போல, உழைப்பாளிக்குத்தான் வருந்தியுழைத்த வுழைப்பால் வந்த வுணவு, கேழ்வரகு மாவினாற் காய்ச்சிய தெண்கூழாயினும் தேவரமுதாம். உம்மை இழிவு சிறப்பு.