பக்கம் எண் :

அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.

 

கீழ் - கீழ்மகன்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - பட்டித்தன்மையில் தன்னினும் குறைந்தவரைக கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தில் அவரினும் மேம்பட்டுத் தன் மிகுதிகாட்டி யிறுமாந்து நிற்பான்.

அகப்பட்டி தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி யென்பது பட்டிமாடு. பட்டிமாடுபோற் கட்டுக் காவலின்றித் திரிபவனைப் பட்டி யென்றது உவமவாகுபெயர்.

" நோதக்க செய்யுஞ்சிறுபட்டி (கலித். 51). ' கீழ் ' பண்பாகுபெயர்."