பக்கம் எண் :

அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.

 

கீழ்களது ஆசாரம் அச்சமே - கீழ்மக்களது ஒழுக்கமெல்லாம் தீயொழுக்கங் கண்டுபிடிக்கப்படின் அரசனால் தண்டனைவரும் என்று அஞ்சும் அச்சத்தினால் ஏற்படுவதே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அச்சமில்லாத வழியில், தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாற் சிறிது ஒழுக்கமுண்டாம்.

கீழ்மக்களின் ஒழுக்கம் பெரும்பாலும் அச்சமும் சிறுபான்மை தன்னலமும் பற்றியன்றி, இயல்பாக ஏற்படாதென்பதாம். ஆசாரத்தின் கரணியத்தை ' ஆசாரம் ' என்றும், அவாப்படுவதை 'அவா' என்றும், சார்த்திக் கூறினார். 'கீழ்கள்' ஆகுபெயர். ' எச்சம் ' இடப்பொருளுருபு தொக்கது.