பக்கம் எண் :

ஏற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து!.

 

கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- ஏதேனுமொரு துன்பம்நேர்ந்தவிடத்து அதைச் சாக்கிட்டுத் தம்மை விரைந்து பிறருக்கு விற்றற்கே யுரியர்.

'ஒன்று' என்றது, பணத்தேவையான ஏதேனு மோர் அமையம் அல்லது பதவியைக் காத்துக்கொள்ளப் பிறர்க்கு அடிமைப்படும் நிலைமை கொள்பவர் தம் கயமை யறிந்து வேண்டாமென்னுமுன் தம்மை விற்று விடுதலும்,தன்மானமும் உரிமையுணர்ச்சியும் ஒரு சிறிதும் இல்லாதவர் என்பதும் தோன்ற, 'விரைந்து' என்றார். கீழ்மக்கள் ஒன்றிற்கும் உதவார் என்பது கருத்து. இக்குறளால் அவரின் அடிமை மனப்பான்மை கூறப்பட்டது.

உறுப்பியல்- குடிமைப்பகுதி முற்றிற்று.

பொருட்பால் முற்றிற்று.