பக்கம் எண் :

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

 

(மாந்தப் பெண்ணாதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினாலான வருத்தங் கூறியது.)

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்- இத்தகைய அழகிய தோற்றமுடையாள் என் நோக்கிற்கு எதிர்நோக்குதல்; தாக்கு அணங்குதானைக் கொண்ட அன்னது உடைத்து- தானே தானே தாக்கி வருத்தும் ஒரு தெய்வப்பெண்,தனக்குத் துணையாக ஒரு படையையுஞ் சேர்த்துக் கொண்டாற் போலும் தன்மையை யுடையதாம்.

அழகால் தன்னை வருத்துதல் மேலும், காதல் தோன்றாத எதிர்நோக்கால் தன்னை வருத்துதல் கூறியவாறு. தாக்கணங்கு சூரரமகள். 'தானைக்கொண்டு' எதுகை நோக்கி வலி மிக்கது.