பக்கம் எண் :

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

 

இதுவுமது

கூற்று என்பதனை பண்டு அறியேன் - காலன் என்று சொல் லப்படுவதை இதற்கு முன்பு கேட்டறிந்த தல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்போது கண்டறிந்தேன்; பெண்தகையால் பேர் அமர்க்கட்டு - அது பெண்டன்மையுடன் பெரிய அமர்த்த கண்களையுடையது.

பெண்டன்மை செயல்களாற் குறிப்பா லறியப்பட்ட அச்சம் மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அமர்த்தல் போர் செய்தல் ' ஆல் ' உடனிகழ்ச்சிப் பொருளது. அழகும் காதல் தோன்றாத எதிர் நோக்கும் அளவிறந்து துன்புறுத்துவதால், கூற்றாக்கிக் கூறினான்.