பக்கம் எண் :

பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
கணியெவனோ வேதில தந்து.

 

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு- புறத்துப் பெண்மானொத்த பார்வையழகையும் அகத்து நாணழகையும் உடைய இவளுக்கு; ஏதில தந்து அணி எவனோ- இயற்கையும் தற்கிழமைச்சார்புமான இவ்வணிகளே அமைந்திருக்க, செயற்கையும் பிறிதின் கிழமைச் சார்புமான பிற அணிகளைக்கொண்டு வந்து அணிதல் எதற்காம்.

மடநோக்கு அழகிய பார்வை, இயற்கையழகை மறைத்தலும் இவளுக்கு வீண் சுமையாதலும் எனக்குத் துன்பந்தருதலுமன்றி; இப்புறவணிகளால் ஒருபயனுமில்லை யென்பது தலைமகன் கருத்து.