பக்கம் எண் :

நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்.

 

(தலைமகள் காதலை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.)

நோக்கினாள்- நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ;நோக்கி இறைஞ்சினாள்- அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங்கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலைகுனிந்தாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் -அச்செயல் எம் மிருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும்.

யாக்கும் அன்பை யாப்பென்றார்.யாப்பைப் பயிராக வுருவகியாமையின் இது ஒரு மருங்குருவகம்.