பக்கம் எண் :

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

 

இதுவுமது

செறாச் சிறுசொல்லும் - உண்மையாக வெறுப்புக் கொள்ளாத போலிக்கடுஞ்சொல்லும் ; செற்றார்போல் நோக்கும் - அகத்திற் பகையாதிருந்தே புறத்திற் பகைத்தார் போற் பார்க்குஞ் சினப்பார்வையும்; உறார்போன்று உற்றார் குறிப்பு- அயலார்போல் நடித்து அன்பராயிருப்பவரிடம் ஒரு கருத்துப்பற்றி நிகழ்வனவாம்.

இவை இயல்பல்லாது உள்ளத்துட் குறித்த ஒரு பயன்நோக்கிச் செய்கின்றன வாதலின், இவற்றாற் கலங்கவேண்டிய தின்று என்பதாம். 'குறிப்பு' ஆகுபெயர். 'செறா அர்', 'உறா அர்' இசை நிறையளபெடைகள்.