பக்கம் எண் :

உறுதோ றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

 

உறுதோறு உயிர்தளிர்ப்பத்  தீண்டலால் - நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இவ்விளம் பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தினால் அமைக்கப் பெற்றனவாயிருக்கின்றன.

மென்மையுந் தண்மையும் இன்பமும் பற்றி 'அமிழ்தி னியன்றன' என்றான். பேதை என்னுஞ் சொல் பருவங் குறியாது இளமை குறித்து நின்றது. 'தோள்' பால்பகாவஃறிணைப் பெயர். தழைத்தல் கிளர்ச்சியும் உரமும் பெறுதல்.