பக்கம் எண் :

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம் .

 

( இடந்தலைப் பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது . )

திருமணியில் பாவாய் - என் கண்ணின் கருமணியின்கண் தங்கும் பாவையே ! நீ போதாய் - நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக ; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - ஏனெனின் , எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை யுடையாட்கு இருக்க வேறிடமில்லை .

யான் இவளைக் காணாதிருத்தல் கூடாமையின் , என்றும் என் கண்ணிற்குள்ளேயே இருக்கத் தக்காள் . அதற்குள் இருவர் இருக்க இடமின்மையின் , உன்னினுஞ் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்துவிட்டு நீ வெளியேறிவிடுவாயாக என்று , தன் மறவாக் காதலைத் தெரிவித்த வாறாம் . ' யாம் ' பெருமிதப் பன்மை அல்லது அரசப்பன்மை . ' திருநுதல் ' அன்மொழித்தொகை .