பக்கம் எண் :

ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன்
னீராக நீளுமிந் நோய்.

 

தலைமகன் சிறைப்புறத்தா னாதலறிந்த தோழி, வரைவு காலந் தாழ்த்தலை ஆற்றாளான தலைமகளிடம் ஊரார் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டுமென்று சொன்ன விடத்து, அவள் சொல்லியது]

இந் நோய்-இக்காம நோயாகிய பயிர் ; ஊரவர். கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்...இவ்வூர் மகளிர் எடுக்கின்ற அலரை எருவாகவும், அது கேட்டு அன்னை கடிந்து கூறும் வெஞ் சொல்லை நீராகவும் கொண்டு, வளர்கின்றது.

நோயைக் தணிக்க வேண்டிய ஏதுக்கள் அதை வளர்த்தே வருகின்றன என்பதாம். தலைமகன் விரைந்து வரைவானாதல் கருதிய பயன். 'ஊரவர்' இங்கு ஆணொழி பொதுச் சொல். நோயைப் பயிரென்று உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.