பக்கம் எண் :

ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

 

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல்-தோழி! நீ என்னுயிரைப் பேணிக்காப்பாயாயின், அதற்கு இன்றியமையாத் துணைவராக அமைந்தவரின் பிரிவு நேராமற் காப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது-பின்பு அவர் செலவழுங்குவாரின்றிச் சென்று விடின், என் உயிருஞ் சென்றுவிடும்; அதன்பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.

'அமைந்தார்' என்னுஞ்சொல் இறைவன் ஏற்பாட்டின்படி அமைந்தவர் என்னுங் குறிப்பினது. (ஒ. நோ; 'marriages are made in heaven.) 'மற்று' பின்மை அல்லது வினைமாற்றுப் பொருளில் வந்தது.