பக்கம் எண் :

தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.

 

(இதுவுமது)

தெரிந்து உணரா நோக்கிய உண்கண்-மேல் விளைவதை ஆராய்ந்தறியாது அன்று காதலரைக் காதலொடு நோக்கிநின்ற என் மையுண்ட கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்-இன்று இது நம்மால் வந்ததுதானே! ஆதலாற் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று அன்போடு! கூறுபடுத்துணராது, துன்புற்று வருந்துவது ஏன்?

துன்பம் வருமுன் காவாதார் அதுவந்தபின் வருத்துவது வீண்மடச்செய்கை யென்பதாம்.மேல் விளைவாவது பிரிவினுல் நேரும் ஆற்றாமைத் துன்பம்.