பக்கம் எண் :

உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது.

 

(காதலர் பிரிந்தணித்தாயிருக்கவுங் ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.)

எம் காதலர் உவக்காண் செல்வார் - முன்புறம் காதலர் உதோ உந்த இடத்திற்குத்தான் செல்வார்; இவக்காண் என் மேனி பசுப்பு ஊர்வது-அதற்குள் இங்கே என் உடம்பெல்லாம் பசலை படர்ந்துவிடும்.

இங்ஙனம் ஒரு சில அடித்தொலைவே நம் காதலர் நடந்து செல்லினும், அடுத்தது காட்டும் பளிங்குபோலப் பளிச்சென்று பசலை படரும் என் மேனி. அவர் பல நாள்வழி அல்லது நாழிகை வழித் தொலைவிலேயே இருப்பினும், ஆற்றியிருக்குமோ என்றவாறாம். ‘உவ’, ‘இவ’ சுட்டிடைச் சொற்கள். காண் முன்னிலையசை, ‘உவ’ என்றது ஒரு சில அடித்தொலைவேயுள்ள முன்னிலையிடத்தை, இம்முன்மைச் சுட்டு இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தது.