பக்கம் எண் :

விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

 

(இதுவுமது)

விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கின் அவிவு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இருளைப்போலவே; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு-தலைவரின் தழுவல் நெகிழ்வு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இப்பசலை.

காதலர் உடனிருந்து தழுவல் நெகிழினும் உடனே வரும் பசலை அவர் பிரிந்துதொலைவிற்குச் சென்றபின் வராதிருக்குமோ என்ற வாறாம். பார்த்தல் பார்த்துவருதல். கொண்டவன் கொள்-கொண்கு-கொண்கன். ஏகாராம் பிரிநிலை.