பக்கம் எண் :

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

 

(இதுவுமது)

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்- முன் பொருநாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வு அற்று- அங்ஙனம் படுத்த அளவில் அள்ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்துதிரண்டுவிட்டது.

அப்புடை பெயர்ச்சிக்கே அவ்வாறான பசலை, இப்பிரிவின் கண் எவ்வாறாகுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்பதாம். ஏகாரம்தேற்றம்.