பக்கம் எண் :

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுந மென்னுஞ் செருக்கு.

 

(இதுவுமது)

வாழுநம் என்னும் செருக்கு-நம் காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து விரைந்து வருவர், அதன்பின் இன்புற்று வாழ்வோ மென்னும் மிடுக்கு; வீழுநர் வீழப்படுவார்க்கே அமையும்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப் பெறும் மகளிர்க்கே அமைவதாம்.

நாம் அவராற் காதலிக்கப் பெறாமையின் நமக்கு அஃதில்லை யென்பதாம். ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.