பக்கம் எண் :

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
இருதலை யானு மினிது.

 

(இதுவுமது)

காமம் ஒருதலையான் இன்னாது-ஆடவன் பெண்டு என்னும் இருபாலுள் காதல் ஒருதலைக்கண் மட்டுமிருப்பின் அது துன்பந்தருவதேயாம்; காப்போல இருதலையானும் இனிது-காவாட்டுச் சுமைபோலே இருதலையும அது ஒத்திருந்த விடத்தே இன்பந்தருவதாம்.

என்னிடத்துள்ள காதல் அவரிடத்து மிருப்பின் இவ்வாறு துன்புறேன் என்பதாம். மூன்றாம் வேற்றுமை ஆனுருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன வேற்றுமை மயக்கம்.