பக்கம் எண் :

நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
டிசையு மினிய செவிக்கு.

 

[இதுவுமது]

நசைஇயார் நல்கார் எனினும்-என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரே யாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய-அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும் என் செவிக்கு இன்பந்தருவனவாம்.

இழிவு சிறப்பும்மை, அவர் அண்மையில் வருகின்றிலர் என்னும் செய்தியாயினும் என்பது படநின்றது, அதுவும் பெற்றிலேன் என்பது கருத்து. 'ந சை இ' சொல்லிசையளபெடை. 'இசை' ஆகுபெயர்.