பக்கம் எண் :

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்

 

பிறவும் தம்போல் பேணிச் செயின்-பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

"கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்"

(பட்டினப். 205-211)

வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடுமில்லா நல்வாணிகமாம்.