பக்கம் எண் :

யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர்.

 

(இதுவுமது)

எம் நெஞ்சத்து அவர் ஓஓ உளரே - எம்முடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! ; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அதுபோல யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ, இல்லேமோ? தெரியவில்லையே!

யாம் அவர் உள்ளத்திலிருந்தும் வினை முடியாமையால் வரவில்லையோ, அல்லது அது முடிந்தும் யாம் அவர் உள்ளத்தில் இல்லாமையால் வரவில்லையோ, என்பது கருத்து. ஓகாரம் ஈண்டுச் சிறப்புப் பற்றி இடைவிடாமை யுணர்த்தி நின்றது. இனி, வியப்புக் குறிப்பினது என்றுமாம். 'ஓஒ' இசைநிறை யளபெடை. 'கொல்' ஐயம். ஏகாரம் தேற்றம்.