பக்கம் எண் :

எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு.

 

(இப்பிரிவுத் துன்பமறிந்து வந்து காதலர் உனக்குச் சிறந்த இன்பஞ் செய்வர் என்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) எனைத்து நினைப்பினும் காயார் - யான் தம்மை எவ்வளவு நினைத்தாலும் அது பற்றிச் சினங்கொள்ளார்; அனைத்து அன்றோ காதலர் செய்யும் சிறப்பு - அவ்வளவு பெரிதன்றோ காதலர் எனக்குச் செய்யுஞ் சிறந்த இன்பம்!

தனக்கு அற்றை நிலையில் அந்நினைப்பினும் சிறந்த இன்பமின்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள், காயாமை அந்நினைவிற் குடம்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தோழி கூற்றைக் குறிப்பாற் பழித்துப் பகடிசெய்தவாறு. 'காதலர் நம் மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் ஓதும் பாடவேறுபாடுகள் சிறந்தன வல்ல.