பக்கம் எண் :

நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர்.

 

(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவேன் என்பது படச் சொல்லியது.)

நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து கூடி யின்பந்தராதவரை கனவினாற்காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கட் கண்ட காட்சியால் என் உயிர் தழைக்கின்றது .

அக்காட்சியால் யான் ஆற்றியுள்ளேன். நீகவல வேண்டிய தில்லை என்பதாம். மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்து மயங்கின.