பக்கம் எண் :

புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை.

 

(தன் செயலறவை அதன் மேலேற்றிச் சொல்லியது)

மருள்மாலை - மயங்கும் மாலையே!; புன்கண்ணை - நீயும் என்னைப்போலத் துன்பமுடையையாயிருக்கின்றாய்; நின்துணை எம் கேள் போல் வன்கண்ணதோ-உன்னுடைய துணையும் என்னுடைய துணைபோல; அன்பற்றதோ? சொல்வாயாக

மருளுதல் அல்லது மயங்குதல் பகலும் இரவும் தம்முட்கலத்தல். அவை கலங்குதற் பொருளும் உணர்த்தும் .புன்கண் அழகின்மையும் துன்பமும். மாலைப் பொழுது ஒளியின்றிப் பொலிவிழத்தலாலும், தலைமகள் தன் செயலற்ற நிலையை அதன் மேலும் ஏற்றிக் கூறினாள். எமக்குத் துன்பஞ்செய்தாய்; அதனால் , நீயுங் கலங்கிப் பொலிவிழந்தாய் என்னுங் குறிப்பால் 'வாழி' என்றாள்.