பக்கம் எண் :

பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.

 

(ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

பனி அரும்பிப் பைதல் கொள் மாலை-காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்து வந்த மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்-இந்நாளில் எனக்கு உயிர் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிப் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது.

'பனியரும்பிப் பைதல் கொள்' என்னுந் தொடர், நடுக்கங் கொண்டு துன்பப்பட என்றொரு குறிப்புப் பொருளுந் தோன்ற நின்றது.