பக்கம் எண் :

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண்.

 

(இதுவுமது)

பசந்து பனிவாரும் கண்- பசலையடைதல் மேலும் நீர்வடியும் உன் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- நம்மால் விரும்பப்பட்டவர் அன்பு செய்யாமையைப் பிறருக்குச் சொல்வன போலாகின்றன. ஆதலால் நீ ஆற்றல் வேண்டும்.

சொல்லுவ போலுதல் அதனை அவருய்த் துணருமாறு நிலைமை கெடுதல். நயந்தவர்க்கு என்று பாடமோதுவாரு முளர்.