பக்கம் எண் :

கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

 

(இதுவுமது)

தொடியொடு தொல் கவின் வாடிய தோள்- வளையல்களுங் கழன்று பழைய இயற்கை யழகையுமிழந்த இத்தோள்கள்; கொடியார் கொடுமை உரைக்கும்- கட்டியணைத்த கை சற்று நெகிழினும் ஆற்றாதவள் இத்துணைக் கால நீட்டியது என்னவாறென்று எண்ணாத, கொடியவரின் கொடுமையைத் தாமே சொல்கின்றன.

அவரொடு கலந்த தோள்களை சொல்லுமாயின், கலவாத அயலார் சொல்வதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம். உரைத்தல் உரைப்பது போலத் தெரிவித்தல். 'ஒடு' வேறுவினைக் கண் வந்த உடனிகழ்ச்சி.