பக்கம் எண் :

தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து.

 

[தானாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குச் சொல்லியது.]

தொடியொடு தோள்நெகிழ- யான் ஆற்றியிருக்கவும் என்வயப்படாது கடகங்கள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்- நீ அவற்றைக் கண்டவளவில் காதலரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது உள்ளே நோகின்றேன்.

யான் ஆற்றேனாகின்றது காதலர் வராததிற்கன்று; நீ அவரைக் குறைகூறுகின்றதற்கே யென்பதாம். 'ஒடு' மேற்கூறியதே.