பக்கம் எண் :

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து.

 

[அவ்வியற்பழிப்புப் பொறாது தன்நெஞ்சிற்குச் சொல்லியது.]

நெஞ்சே- என் உள்ளமே!; கொடியார்க்கு என்வாடு தோள் பூசல் உரைத்து- இவள் கொடியா ரென்கிறவரிடம் நீ சென்று என் மெலிகின்ற தோள்களினால் ஏற்படும் ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ- ஒரு மேம்பாடு பெறுவாயோ? பெறின் அதைப் போற் சிறந்ததொன்றில்லை.

'பாடுபெறுதியோ' என்னும் ஆர்வ வினா பெறுதல் கூடாமையை யுணர்த்தி நின்றது. 'கொடியார்' என்றது இங்கு எதிர்மறைக் குறிப்பு. 'வாடுதோள்' என்பது அவை தாமே வாடுகின்றன என்பது தோன்ற நின்றது. 'பூசல்' என்றது தோழி இயற்பழித்தலும் தலைமகள் அதை மறுத்துரைத்தலும் முதலியவற்றை.