பக்கம் எண் :

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

 

(இதுவுமது)

முயக்கிடைத் தண்வளி போழ- அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்குமிடையே ஒரு சிறுதென்றற் போழ்ந்து நுழைந்ததாக; பேதை பெருமழைக் கண் பசப்பு உற்ற- அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலையடைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையுமாகிய மாபேரிடையீடுகளையெல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ!

'போழ' என்றது இருவருடம்பும் ஒன்றென ஒன்றியிருந்தமை தோன்ற நின்றது.