பக்கம் எண் :

நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி; மலையினும் மாணப் பெரிது - மலையுயர்ச்சியினும் மிகப் பெரிது.

மலை யென்பது வளமிகுந்ததாதலின், குட மலையும் பனி (இமய) மலையும் போல்வதாகும். உம்மை உயர்வு சிறப்பு. ' நிலையிற்றிரியா தடங்குதல்' ஐம்புலவின்பமும் நுகர்ந்து கொண்டே அடங்கியொழுகுதல்.