பக்கம் எண் :

இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில் .

 

(இதுவுமது)

(இ-ரை.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - என் உள்ளமே ! நீ அவர்பாற் செல்வதுஞ் செய்யாது இறந்துபடுவதுஞ் செய்யாது , இங்கிருந்து கொண்டு அவர் வரவு நினைந்து வீணாக வருந்துவது ஏன் ? ; பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல் - இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடத்துத்தான் நம்மை அன்பாக நினைந்து நம்மிடம் வரக் கருதுதல் இல்லையே !

நம்பால் அருளிலராகவின் தாமாக வரார் . இனி , நாம்தான் அவரிடத்துச் செல்லவேண்டும் என்பதாம்.