பக்கம் எண் :

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்றா லுறாஅ தவர் .

 

(இதுவுமது)

(இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே ! ; யாம் உற்றால் உறாதவர் - யாம் அவர்பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்பு கொள்ளாத நம் காதலரை ; செற்றார் எனக் கைவிடல் உண்டோ - வெறுத்தாரென்று நாம் அவரை விட்டு விலகுதல் நமக்குத் தகுமோ ? தகாதே !

உறுதல் அன்பாற் பொருந்துதல் . அவர்பாற் செல்லுவதே நமக்குத் தகும் என்பதாம்.