பக்கம் எண் :

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின்.

 

(அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பது படச் சொல்லியது.)

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா- எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம்.

அவர் நம்மைக் கூடாவாறு பிரிந்து போனமையாலும், நாம் அவரை மறக்க முடியாமையாலும், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம். ஆதலால், அவரை மறந்தாற்றுதலே நன்றென்பதாம்.