பக்கம் எண் :

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று.

 

(நம்மை மறந்தாரை நாமும் மறத்தற்குரியோம் என்ற தோழிக்குச் சொல்லியது.)

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை- தம்மைத் துன்புறுத்திப் பிரிந்துசென்றார் பின் செல்லாது தாமும் நீங்கி நிற்கும் நிறையுடைமை; காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று-காமநோய்ப் படாதவர் அறிவதொன்றே யன்றி அந்நோய்ப்பட்டவர் அறிவ தொன்றன்று .

காம நோய்ப்பட்டவர் மானமுடை யவரல்லர் . ஆதலால் ' செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை ' அவர்க்கில்லை யென்பதாம் . இன்பக் காலத்தைத் துன்பக்காலமாக மாற்றியதால் ' செற்றார் ' என்றாள் . பின் செல்லுதல் இடைவிடாது நினைத்தல் . ' பெருந்தகைமை ' இங்கு ஆகுபொருளி .