பக்கம் எண் :

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர் .

 

(இதுவுமது)

(இ-ரை.) செற்றவர் பின்சேறல் வேண்டி-என்னைத் துன்புறத்திப் பிரிந்துசென்றவர் பின்னே யான் செல்லுதலை வேண்டுதலான் ; என்னை உற்ற துயர் எற்று- என்னை யடைந்துள்ள காமநோய் எத்தகையது !; அளித்து-ஐயோ ! இரங்கத்தக்கது !.

இக்காம நோய் என்னை அளவிறந்து இழிவுபடுத்துவதால் மிகக். கொடிது என்பதாம் . ' செற்றவர் ' என்றது மேற்குறளிற் 'செற்றார் ' என்றது போன்றதே . ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பு . ' அரோ ' அசைநிலை.