பக்கம் எண் :

நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்.

 

(பரத்தையிற் பிரிந்துவந்தவனாகக் கருதப்பட்ட தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகளை , நோக்கி நீ புலவாமைக்குக் . கரணியம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது) .

பேணியார் காமத்தால் பெட்ப செயின்- நம்மால் விரும்பப்ட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யும்போது ; நாண் என ஒன்றோ அறியலம்- நாண் என்று ஒன்றை அறியமாட்டாதிருந்தேம்.

ஆசிரியர் ஒருமனை(வி)மணத்தையே இவ்வின்பத்துப் பாலிற் கூறுவதாலும் , இது தலைசிறந்த தமிழறநூலாதலாலும் , கோவைகளிற்போலப் பரத்தை கூற்றாக இங்கு ஒன்றுங் கூறப்படாமையாலும் , ' பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு ' என்று பரிமேலழகர் .கொளுவிற் கூறியிப்பது பொருந்தாது . ' ஒன்று ' என்பது ஒரு தனிப்பொருள் என்னும் பொருட்டு . ஒகாரம் பிரிநிலை . ' அறியலம் ' என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாயின் , தன் குற்றத்தைக் குறைத்தற்குத் தோழியையும் உளப்படுத்திக் கொண்டதாகக் கொள்க . செயப்பாட்டு வினைமுதல் ' பேணியார் ' எனச் செய்வினை முதல் வடிவில் நின்றது . ' நாண் ' பரத்தையர் தோய்ந்ததாகக் கருதப்பட்ட மார்பைத் தோய்தற்கு நாணுதல் . 'பெட்ப' வேட்கை மிகுதியாற் கருதியிருந்த கலவிவினைகள் . ' அறியலர் ' . 'பெட்பச் செயின் ' எனபன மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம் .