பக்கம் எண் :

புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு.

 

(இதுவுமது)

(இ-ரை.) புலப்பல் எனச் சென்றேன்-அவர் வந்தபொழுது . உரையாடாது ஊடவேண்டுமென்று கருதி அவர் முன்நில்லாது வேறோரிடத்திற்குப் போனேன் ; நெஞ்சம் கலத்தல் உறுவதுகண்டு புல்லினேன்-அங்ஙனம் போய்த்தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலையறிந்து , இனி இவ்வூடல் பயன்படாதென்று அவரைத் தழுவினேன்.

நிறையழிந்தவர்க்குக் கூடலே யன்றி ஊடலில்லை யென்பதாம்.