பக்கம் எண் :

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
னீங்குமென் மென்றோட் பசப்பு.

 

(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயாய்ப் பசக்கற் பாலை யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.)

கண் ஆரக் கொண்கனைக் காண்க- என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மேல் தோள் பசப்பு நீங்கும்- அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கி விடும்.

நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' அது, இன்றியமையாததென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.