பக்கம் எண் :

வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோ யெல்லாங் கெட.

 

இதுவுமது)

கொண்கன் ஒருநாள் வருக- நீண்டநாளாக வராத என்காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவாராக; பைதல் நோய் எல்லாம் கெடப் பருகுவன்- வந்தால், எனக்குத் துன்பஞ் செய்கின்ற இக்காம நோய் அடியோடு நீங்குமாறு; அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன்.

காதலர் வரின் இன்றுள்ள நோயும் இனிவரும் நோயும் ஒரே வேளையில் முற்றும் நீங்கிவிடும் என்பதாம். 'வருக', 'மன்' என்பவற்றிற்கு மேலுரைத்தவா றுரைக்க.