பக்கம் எண் :

பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
முள்ள முடைந்துக்கக் கால்.

 

(இதுவுமது)

உள்ளம் உடைந்து உக்கக்கால்- காதலி நம் பிரிவையாற்றாது உள்ள முடைந்து இறந்து பட்டபின்; பெறின் என் ஆம்- நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமைய ளானால்தான் என்ன பயன்? பெற்றக்கால் என் ஆம்- அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? உறின் என் ஆம்- இனி, அதற்கும் மேல், நம்மொடு உடம்பொன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவையொன்றாலும் ஒரு பயனுமில்லையே!

அதற்குமுன் யான் விரைந்து செல்லவேண்டுமென்பது கருத்தாதலின், விதும்பலாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக. என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே. 'ஆம்' ஆகும் என்பதன் தொகுத்தல்.