பக்கம் எண் :

முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.

 

(இதுவுமது)

முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல்-மொட்டின் முகப்பிற்குள் அடங்கிக் கிடந்து வெளியிற் பரவாத மணம் போல ; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு-என் இளங்காதலியின் நகை யரும்பும் முறுவலுக்குள் உள்ளதாய் வெளியில் தோன்றாத தொரு குறிப்புண்டு.

நகை புணர்ச்சி யின்பத்தால் தோன்றும் மகிழ்ச்சி வெளிப்பாடு.