பக்கம் எண் :

பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து.

 

(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள் அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக் கறிவுறுத்தது.)

பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினாலான துன்பத்தை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணங் கலக்கின்ற கலவி ; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்த நிலைமையை நோக்கின் , மீண்டும் அத் துன்பத்தை நீண்டகாலம் அரிதாக ஆற்றியிருந்து , அவரது அன்பின்மையையே நினைக்குந் தன்மையை யுடையதாகும்.

செய்யும் இன்பம் பிரிதற்குறிப்பொடு கூடியதாயிருத்தலின் , முடிவில் துன்ப மாகவே முடியும் என்பதாம் .