பக்கம் எண் :

தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை .

 

(இதுவுமது)

தண்ணந் துறைவன் தணந்தமை- குளிர்ந்த துறையை யுடையவர் நம்மை உடம்பாற் கூடியிருந்தே உளத்தாற் பிரிந்தமையை; நம்மினும் முன்னம் வளை உணர்ந்த - அவர் குறிப்பாலறியக் கூடிய நம்மினும் முற்பட்டு இவ் வளையல்கள் நுணுகி யறிந்தன.

'தணந்தமை' என்று இறந்த காலத்திற் கூறியது கருத்து நிகழ்வு பற்றியும் தேற்றம் பற்றியும் வந்த காலவழுவமைதி. மன நோவால் தோள் மெலிவும் தோள் மெலிவால் வளை கழல்வும் நிகழ்ந்திருக்கவும், மனத்திற்கு முன்னம் வளைகள் அறிந்து கழன்றன வென்று அவற்றை அறிவுஞ் செயலு முடையனவாகக் கூறியிருப்பது, துயர் மடமையின் (pathetic fallacy) பாற்படும்.