பக்கம் எண் :

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து!.

 

(இதுவுமது)

எம் காதலர் நெருநற்றுச் சென்றார் - எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போனார் ; யாமும்மேனி பசந்து எழுநாளேம்- அப்பிரிவிற்கு யாமும் மேனி பசலை யடைந்து எழுநாட் கழிந்த நிலையில் இருக்கின்றேம் .

நேற்றுச் செய்த பேரின்பக் கூட்டத்தால் பிரிவு துணியப் பட்ட தென்பாள் ' நெருநற்றுச் சென்றார் ' என்றும் , அதனை எழு நாட்கு முன்பே ஐயுற்றதனால் அன்றே மேனி பசந்த தென்பாள் ' மேனிபசந்தெழு நாளேம் ' என்றும் , கூறினாள் . இதனால் தலைமகன் பிரிதற்குறிப் புணர்த்தப் பட்டது.